×

மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

 

சிவகங்கை, பிப். 14: சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு வரலாற்றுத் துறையில் தமிழ்ச் சமூகத்தில் தொல்லியலின் தாக்கம் என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை அரசு அருங்காட்சியகம் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தினர்.

வரலாற்றுத் துறை தலைவர் வெண்ணிலா வரவேற்றார். கல்லூரி முதல்வர்(பொ) இந்திரா தலைமை வகித்தார். தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா முன்னிலை வகித்தார். பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய நிறுவனர் பேராசிரியர் செல்லப்பாண்டியன் சிறப்புரையாற்றினார். பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட பொருநை ஆற்றங்கரை என்ற நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

தொல்நடைக் குழு செயலாளர் நரசிம்மன், செயற்குழு உறுப்பினர் வித்யாகணபதி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் அஸ்வத்தாமன், முனீஸ்வரன் கருத்தரங்கிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். மாணவி பிரியதர்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி சுகன்யா நன்றி உரை கூறினர்.

The post மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Women's College ,Sivagangai ,25th Silver Jubilee ,Sivaganga Government Women's ,Arts ,College ,Sivaganga Government Women's Arts College ,
× RELATED நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியை சுற்றி Drone-கள் பறக்க தடை